வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு


வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 8 March 2021 3:30 PM GMT (Updated: 8 March 2021 3:30 PM GMT)

நாகையில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்:
நாகையில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார்.
6 சட்டசபை தொகுதிகள் 
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2-ந்தேதி நடக்கிறது. ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில்(மயிலாடுதுறை மாவட்டம் உள்பட) நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இதில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் நாகையில் உள்ள இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியிலும், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியிலும் எண்ணப்படுகிறது.
கலெக்டர் ஆய்வு 
 நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பிரவீன் நாயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா? எந்த அறையில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பது, எந்த அறையில் வாக்குகள் எண்ணும் பணியை மேற்கொள்வது. எந்தெந்த இடங்களில் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகா‌‌ஷ்மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, தேர்தல் தாசில்தார் பிரான்சிஸ் உள்பட பலர் உடன் இருந்தனர்

Next Story