உளுந்தூர்பேட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது

உளுந்தூர்பேட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சம் சிக்கியது
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அன்பழகன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மராட்டிய மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி காரில் வந்தவர்களை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த பையில் ரூ.1 லட்சத்து ஆயிரத்து 320 இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் இது குறித்து காரில் வந்தவர்களிடம் கேட்டபோது மராட்டிய மாநிலத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்துள்ளதாகவும் சாப்பாடு உள்ளிட்ட செலவுக்காக இந்த பணத்தை கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்துக்கு எடுத்து சென்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story