புகளூர் ரெயில்கேட் அருகே திடீர் தீ விபத்து


புகளூர் ரெயில்கேட் அருகே திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 8 March 2021 6:14 PM GMT (Updated: 2021-03-08T23:44:11+05:30)

புகளூர் ரெயில்கேட் அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

நொய்யல்
புகளூர் ரெயில்வே கேட் அருகே இரும்புப் பாதை ஓரத்தில் நெடுகிலும் செடி, கொடிகள் மற்றும் பல்வேறு வகையான மரங்கள் முளைத்துள்ளன. இந்நிலையில் அந்த செடி, கொடி மற்றும் மரங்களில் ரெயில்வே பாதை அருகே திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைக்கண்ட ரெயில்வே ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் அணைக்க முடியவில்லை. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 
தகவலின்பேரில், நிலையஅலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். தீ எரிந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக எந்த ெரயில்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Next Story