ஆரணி அருகே விவசாயியிடம் ரூ.1.20 லட்சம் பறிமுதல்


ஆரணி அருகே விவசாயியிடம் ரூ.1.20 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 8 March 2021 11:46 PM IST (Updated: 8 March 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே டிராக்டரில் சென்ற விவசாயியிடமிருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆரணி,

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலில் உள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும்படை அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆரணி வருவாய் கோட்டாட்சியரும், ஆரணி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமா பூங்கொடி தலைமையில், பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில்ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ.1.20 லட்சம்பறிமுதல்

நேற்று தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலாஜி தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் ஆரணி - வந்தவாசி சாலையில் ஆகாரம் கூட்ரோடு அருகே வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்தவழியாக வாழைப்பந்தல் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (வயது 33) டிராக்டரில் வன்தார். டிராக்டலை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அவரிடம் எந்தவித ஆவணம் இன்றி  ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை
 ஆரணி வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடியிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஏழுமலை கூறுகையில் டிராக்டர் டிரைலர் வாங்குவதற்காக வட்டிக்கு வாங்கி வந்ததாக தெரிவித்தார்.
1 More update

Next Story