துணை ராணுவத்தினர், போலீசார் கொடி அணிவகுப்பு


துணை ராணுவத்தினர், போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 8 March 2021 6:24 PM GMT (Updated: 2021-03-08T23:54:39+05:30)

துணை ராணுவத்தினர், போலீசார் கொடி அணிவகுப்பு

தொண்டி
தேர்தல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொண்டி, முதுகுளத்தூர், திருவாடானையில் துணை ராணுவத்தினர், போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடந்தது.
முதுகுளத்தூர்
சட்டமன்றத் தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் வந்துள்ளனர். தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு முதுகுளத்தூரில் நேற்று நடைபெற்றது. முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் இந்த அணிவகுப்பை கூடுதல் துணை கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் மற்றும் முதுகுளத்தூர் துணை கண்காணிப்பாளர் ராகவேந்திரா ரவி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அணிவகுப்பில் துணை ராணுவ படை வீரர்கள் துப்பாக்கி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் கம்பீரமாக ஊர்வலமாக சென்றனர். டவுன் போலீஸ் நிலையத்திலிருந்து பஸ் நிலையம் வழியாக தாலுகா அலுவலகம் வரை சென்றடைந்தது. இதில் முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், கீழத்தூவல்  இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி, கடலாடி  இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தொண்டியில் தேர்தல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேஷியஸ் தலைமையில் துணை ராணுவத்தினர் மற்றும் ஆயுதப்படை போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. பழைய பஸ் நிலையத்தில் தொடங்கிய போலீசாரின் ஊர்வலம் புதிய பஸ் நிலையம், வட்டானம் விலக்கு ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று போலீஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.
திருவாடானை
திருவாடானையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னிஷியஸ் தலைமையில் திருவாடானை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் கஜேந்திரன், கோமதி ஆகியோர் முன்னிலையில் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடங்கி பழைய மீன் மார்க்கெட் பூவாணிகரை வரை நடைபெற்றது. அணிவகுப்பில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முனியாண்டி, மாரி உள்பட எல்லை பாதுகாப்பு படையினர், அதிரடி படையினர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

Next Story