ஜி.உடையாப்பட்டி பொதுமக்களின் தேர்தல் புறக்கணிப்பு வாபஸ்


ஜி.உடையாப்பட்டி பொதுமக்களின் தேர்தல் புறக்கணிப்பு வாபஸ்
x
தினத்தந்தி 8 March 2021 6:39 PM GMT (Updated: 2021-03-09T00:11:17+05:30)

ஜி.உடையாப்பட்டி பொதுமக்களின் தேர்தல் புறக்கணிப்பு வாபஸ் பெறப்பட்டது.

தோகைமலை
தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடலூர் ஊராட்சி ஜி.உடையாப்பட்டியில் கடைவீதியில் உள்ள டாஸ்மாக்கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றாவிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கும் விதமாக கடைவீதிகளில் கருப்பு கொடி கட்டிவோம் என அப்பகுதி பொதுமக்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இதையடுத்து நேற்று காலை குளித்தலை தாசில்தார் கலியமூர்த்தி, கூடலூர் ஊராட்சி மன்றத்தலைவர் அடைக்கன், ஜி.உடையாப்பட்டி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், டாஸ்மாக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்தவுடன் பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஜி.உடையாப்பட்டி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.

Next Story