அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் தேர்வு


அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் தேர்வு
x
தினத்தந்தி 8 March 2021 6:59 PM GMT (Updated: 2021-03-09T00:29:58+05:30)

இளையான்குடியில் அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இளையான்குடி,

இளையான்குடி ஒன்றியத்தில் அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-
கோட்டையூர் சோ.முனியாண்டி சிவகங்கை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராகவும், இளமனூர் கா.செல்லம் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைச்செயலாளராகவும், சாலைக்கிராமம் ஏ.எம்.சுகுமாரன் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைச்செயலாளராகவும், பெரும்பச்சேரி வி.முருகன் மாவட்ட புரட்சித்தலைவி ெஜயலலிதா பேரவை துணைச் செயலாளராகவும், கோட்டையூர் உ.மலைச்சாமி சிவகங்கை மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் நன்னியாவூர் க.பாலகிருஷ்ணன் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச்செயலாளராகவும், திருவள்ளூர் எம்.ஐ.காஜா மைதீன் மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச்செயலாளராகவும், கண்ணமங்கலம் எம்.சதீஷ்குமார் மாவட்ட மாணவரணி துணைச்செயலாளராகவும், தாயனூர் எஸ்.எஸ். இளங்கோவன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச்செயலாளராகவும், வலசைக்காடு பிச்சைபாண்டி அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளராகவும், தெற்கு வலசை காடு ஆர்.தங்கம், மாவட்ட விவசாயப்பிரிவு துணைச் செயலாளராகவும், லட்சுமிபுரம் ஆர்.ஆர்.பாக்கியராஜ் இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளராகவும், கீழநெட்டூர் கே.பாலமுருகன் மாவட்ட இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளராகவும், குமாரக்குறிச்சி நா.முருகேசன் மாவட்ட கலைப்பிரிவு பொருளாளராகவும், குமாரக்குறிச்சி எஸ்.கே.விஜயகுமார் மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை அ.தி.மு.க. தலைமை நியமித்து உள்ளது.Next Story