வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு “சீல்” வைப்பு


வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு “சீல்” வைப்பு
x
தினத்தந்தி 8 March 2021 7:26 PM GMT (Updated: 2021-03-09T00:56:19+05:30)

அனைத்து முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு “சீல்” வைக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை, 
அனைத்து முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு “சீல்” வைக்கப்பட்டது. 
வாக்குப்பதிவு எந்திரங்கள் 
 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் விரைவுப்படுத்தி உள்ளது.  விருதுநகரில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது. 
இந்தநிலையில் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள 311 வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று அருப்புக்கோட்டை- திருச்சுழி சாலையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரிக்கு வந்தது. 
 போலீஸ் பாதுகாப்பு 
தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அனைத்துக்கட்சி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக தனி அறையில் வைக்கப்பட்டு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. 
பின்னர் அந்த கல்லூரி முழுவதும் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Next Story