ரூ.5½ லட்சம் புகையிலை பொருட்கள் பொருட்கள் பறிமுதல்


ரூ.5½ லட்சம் புகையிலை பொருட்கள்  பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 March 2021 7:43 PM GMT (Updated: 2021-03-09T01:13:31+05:30)

சாத்தூர் அருகே ரூ.5½ லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சாத்தூர், 
சாத்தூர் அருகே ரூ.5½ லட்சம் புைகயிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 
புகையிலை பொருட்கள் 
சாத்தூர் அருகே உள்ள ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 32). இவர் சாத்தூர் மார்க்கெட் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் ராமலிங்காபுரத்தில் இவரது குடோனில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் ராமலிங்கபுரத்தில் உள்ள ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான குடோனில் திடீர் சோதனை நடத்தினா். 
பறிமுதல் 
அப்போது அந்த குடோனில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 68 மூடைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து புகையிலை மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலையின் மதிப்பு ரூ.5½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குடோன் உரிமையாளர் ராமகிருஷ்ணனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story