பாவூர்சத்திரம் அருகே கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்


பாவூர்சத்திரம் அருகே  கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்
x
தினத்தந்தி 8 March 2021 7:58 PM GMT (Updated: 2021-03-09T01:28:41+05:30)

பாவூர்சத்திரம் அருகே கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடந்தது.

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூரில் அம்மன் கோவில் முன்பு முக்குலத்தோர் சமுதாயத்தினர் சார்பில், ஊர் தலைவர் மாரியப்பன் மற்றும் சண்முகநாதன் தலைமையில் ஏராளமானோர் திரண்டனர்.

அவர்கள் வீதிகளில் கருப்புக்கொடி கட்டியும், கைகளில் கருப்புக்கொடி ஏந்தியும் போராட்டம் நடத்தினர். குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு மட்டும் 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. 
அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறிய அவர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Next Story