நெல்லை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா


நெல்லை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 March 2021 8:18 PM GMT (Updated: 2021-03-09T01:48:35+05:30)

நெல்லை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

நெல்லை:
 
நெல்லை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது. இதில் 15 ஆயிரத்து 530 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரே நாளில் மட்டும் 6 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 38 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 214 பேர் இறந்துள்ளனர்.

Next Story