சாலையோரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார கேடு


சாலையோரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார கேடு
x
தினத்தந்தி 9 March 2021 1:48 AM IST (Updated: 9 March 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

சாலையோரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார கேடு ஏற்படுகிறது.

ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் விளந்தை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஆண்டிமடம்- ஜெயங்கொண்டம் செல்லும் சாலை ஓரத்தில் கோழி, மீன் இறைச்சி கழிவுகள் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி செல்பவர்கள், சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், கார் மற்றும் பஸ்களில் செல்பவர்கள், அந்த இடத்தை கடக்கும்போது மூக்கை மூடிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் நாய் மற்றும் பறவைகளால் இறைச்சி கழிவுகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. மேலும் அந்த பகுதியில் இறைச்சி கழிவுகளுக்காக சுற்றித்திரியும் நாய்கள் திடீரென சாலையில் ஓடும்போது விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் செத்த நாய்களின் உடல் சாைலயோரத்தில் போடப்படுவதால் மேலும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நாய்களின் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
1 More update

Next Story