பள்ளத்துக்குள் பாய்ந்த லாரி


பள்ளத்துக்குள் பாய்ந்த லாரி
x
தினத்தந்தி 8 March 2021 8:36 PM GMT (Updated: 2021-03-09T02:06:26+05:30)

வேடசந்தூர் அருகே தேங்காய் ஏற்றிக்கொண்டு வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலம் கட்ட தோண்டிய பள்ளத்துக்குள் திடீரென பாய்ந்தது.

வேடசந்தூர்:

வேடசந்தூர்-எரியோடு சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதில் வேடசந்தூரை அடுத்த ஸ்ரீராமபுரத்தில் பாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் நேற்று அதிகாலை பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு தேங்காய் ஏற்றிக்கொண்டு வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலம் கட்ட தோண்டிய பள்ளத்துக்குள் திடீரென பாய்ந்தது. 

இதில் லாரி டிரைவர் கார்த்திக் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை விரிவாக்க பணி மற்றும் பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது என்று அங்கு எந்தவித அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. 

இதுவே விபத்துக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டிள்ளனர்.

Next Story