ராயக்கோட்டையில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.11 லட்சம் குட்கா பறிமுதல் டிரைவர்கள் 2 பேர் கைது


ராயக்கோட்டையில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.11 லட்சம் குட்கா பறிமுதல் டிரைவர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 March 2021 8:43 PM GMT (Updated: 2021-03-09T02:14:55+05:30)

ராயக்கோட்டையில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.11 லட்சம் குட்கா போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எல்லப்பன் கொட்டாய் அருகே சாலையோரம் டயர் பஞ்சராகி நின்று இருந்த லாரியை போலீசார் சோதனை செய்தனர். அதில் வேர்க்கடலை மூட்டைகளுக்கு அடியில் மறைத்து வைத்து குட்கா கடத்துவது தெரியவந்தது.

இதையடுத்து லாரிக்கு அருகில் நின்று இருந்த 2 பேரை பிடித்து  போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சேலம் மாவட்டம் எடப்பாடி பக்கமுள்ள கோனாங்குட்டை பகுதியை சேர்ந்த டிரைவர்கள் சிரஞ்சிவி (வயது35), தர்மபுரி மாவட்டம் காளியப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (38) என்பது தெரியவந்தது.

2 பேர் கைது

இவர்கள் கர்நாடகாவில் இருந்து மதுரைக்கு லாரியில் குட்காவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் கடத்தப்பட்ட ரூ.11 லட்சம் மதிப்பிலான  குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிரஞ்சீவி, செல்வராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story