ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தி.மு.க. கவுன்சிலர் தர்ணா போராட்டம்

தி.மு.க. கவுன்சிலர் தர்ணா போராட்டம்
ஓமலூர்:
ஓமலூரை அடுத்த பெரியேரிபட்டி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவர் ஓமலூர் ஒன்றிய தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். காமலாபுரம் பகுதியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் செல்வியின் கணவர் ராஜா, கோட்டமேட்டுபட்டி பகுதியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் தேன்ெமாழியின் கணவர் தனசேகரன் மற்றும் குப்புசாமி ஆகியோர் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தி.மு.க. கவுன்சிலர் குப்புசாமி கூறும்போது, பெரியேரிபட்டி பகுதியை சேர்ந்த மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் மணி, தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வேலைபார்க்கும் பெண்களை தன் வீட்டை சுற்றி சுத்தம் செய்ய அழைத்து சென்றதாக தெரிகிறது. இது குறித்து ஒன்றிய ஆணையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார். இது பற்றி தகவல் அறிந்ததும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர். மேலும் அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராஜா உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story