நெமிலி பேரூராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி

நெமிலி பேரூராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி
x
தினத்தந்தி 9 March 2021 4:56 AM GMT (Updated: 9 March 2021 4:56 AM GMT)

நெமிலி பேரூராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி

நெமிலி

தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெமிலி பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் தலைமையில் ஊர்வலம் மற்றும் மனித சங்கிலி நடந்தது.  

நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், மஸ்தூர் பணியாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து நெமிலி பேரூராட்சி மற்றும் பஸ் நிலையம் அருகே மனித சங்கிலி நடந்தது.

Next Story
  • chat