ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் விதிமுறை மீறலை கண்காணிக்க கேமராக்கள்


ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் விதிமுறை மீறலை கண்காணிக்க கேமராக்கள்
x
தினத்தந்தி 9 March 2021 4:58 AM GMT (Updated: 9 March 2021 4:58 AM GMT)

ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் விதிமுறை மீறலை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி

ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் விதிமுறை மீறலை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வால்பாறை தொகுதி தேர்தல் அலுவலகம் ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. தேர்தல் அதிகாரியாக, கோவை மாவட்ட ஆய்வுக்குழு அதிகாரி துரைசாமி செயல்பட்டு வருகிறார்.

மேலும் தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டம், வாகன அனுமதி உள்பட பல்வேறு அனுமதி பெறுவதற்கு அலுவலக வளாகத்தில் ஒற்றை சாரள மையம் செயல்பட்டு வருகிறது. இதை தவிர தேர்தல் தொடர்பான புகார்களை பெறுவதற்கு தேர்தல் கட்டுப்பாட்டு மையமும் தொடங்கப்பட்டு உள்ளது. 

இதற்கிடையில் வருகிற 12-ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் அலுவலகத்திற்கு வருவார்கள். எனவே தேர்தல் அலுவலகத்திற்கு வரும் நபர்களை கண்காணிக்க தாலுகா அலுவலகத்தின் முக்கிய பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. 

கேமராக்களின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியின் அறையில் டி.வி. வைக்கப்பட்டு உள்ளது. அந்த அறையில் இருந்தே அலுவலக வளாகத்திற்கு தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுகிறதா? என்பதை கண்காணித்து வருகின்றனர். 

2 பேர் அனுமதி 

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி துரைசாமி கூறும்போது, வேட்பு மனு தாக்கலின் போது 100 மீட்டர் தூரத்திற்குள் வேட்பாளர் மற்றும் அவருடன் 2 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் விதிமுறை மீறலை கண்காணிக்க 5 கேமராக்கள் பொருத்தப் பட்டு உள்ளன. என்றார். 


Next Story