கோவை அ.தி.மு.க. பூத் ஏஜெண்டு வீட்டில் பரிசு பொருட்கள் பறிமுதல்


பரிசு பொருட்கள் பறிமுதல்
x
பரிசு பொருட்கள் பறிமுதல்
தினத்தந்தி 9 March 2021 5:03 AM GMT (Updated: 9 March 2021 5:03 AM GMT)

கோவையில் அ.தி.மு.க. பூத் ஏஜெண்டு வீட்டில் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

கோவை

கோவையில் அ.தி.மு.க. பூத்  ஏஜெண்டு வீட்டில் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பறக்கும் படைகள்


கோவை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 

தேர்தலை முன்னிடடு அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு ஏதாவது பரிசு பொருட்கள் கொடுக்கிறார்களா? என்பதை கண்காணிக்க தொகுதிக்கு 3 பறக்கும் படைகள் வீதம் மாவட்டம் முழுவதும் 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவர்கள் அந்தந்த பகுதிகளில் யாராவது பரிசு பொருட்களை வீடுகளில் பதுக்கி வைத்துள்ளனரா? என்பதை கண்டறிய தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அடிக்கடி வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

பரிசு பொருட்கள்


கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் அ.தி.மு.க. பூத் ஏஜெண்டாக உள்ளார். 

இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கோவை தெற்கு தொகுதி பறக்கும் படை அதிகாரி சந்திர பிரியாவுக்கு தகவல் வந்தது.


உடனடியாக பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று அவரது வீட்டில் சோதனை மேற்கெர்ணடனர். 

அப்போது வீட்டில் 68 பைகளில் வேட்டி, சேலை, தட்டுகள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் இடம்பெற்ற பையில் வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்ப்டடது. 

இதைத்தொடர்ந்து 68 பைகளில் இருந்த அனைத்து பரிசு பொருட்களையும் பறிமுதல் செய்து கோவை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story