மகளிர் தினத்தை முன்னிட்டு இளஞ்சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையம்


மகளிர் தினத்தை முன்னிட்டு இளஞ்சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையம்
x
தினத்தந்தி 9 March 2021 11:31 AM IST (Updated: 9 March 2021 11:31 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

பூந்தமல்லி,

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பெண்களை போற்றும் வகையில் வாக்குச்சாவடி மையம் பிங்க் (இளஞ்சிவப்பு) பூத்தாக மாற்றப்பட்டுள்ளது.

இதற்காக இந்த கட்டிடம் முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டு பலூன்கள் கட்டி தொங்கவிடப்பட்டு இருந்தது. இந்த பூத்தில் பணியில் இருக்கும் தேர்தல் பணியாளர்களும் இளஞ்சிவப்பு நிற புடவை அணிந்திருந்தனர்.

இந்த வாக்குப்பதிவு மையத்தை பூந்தமல்லி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பிரீத்தி பார்கவி திறந்து வைத்தார். இதில் பெண்களுக்கு வாக்கு அளிப்பது எப்படி என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்து மாதிரி ஓட்டுப்பதிவும் நடைபெற்றது.

1 More update

Next Story