திருப்பத்தூர் அருகே உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.45 லட்சம் பறிமுதல்


திருப்பத்தூர் அருகே  உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.45 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 9 March 2021 2:41 PM GMT (Updated: 9 March 2021 2:44 PM GMT)

திருப்பத்தூர் அருகே உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தாலுகா வெங்களாபுரம் கிராமத்தில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அபோது தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் கைலாபுரம் கிராமத்தை சேர்ந்த ஆரி என்பவருடைய மகன் விவேக் என்பவர் காரில் வந்தார். 

காரை நிறுத்தி சோதனை செய்ததில் அவரிடம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் இருந்தது. அதற்கான ஆவணங்கள் இல்லை. அதைத்தொடர்ந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். 

அதேபோன்று தோரணம்பதி சோதனை சாவடியில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நிலை கண்காணிப்பு குழு, சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக காரில் வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த ரகுநாதன் என்பவர் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் உரியஆவனமும் இன்றி எடுத்து வந்தது தெரியவந்தது. இதனால் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இரண்டு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

Next Story