தேசிய அளவிலான சிலம்பம் போட்டிக்கு பி.அக்ரஹாரம் அரசு பள்ளி மாணவி தேர்வு - முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு


தேசிய அளவிலான சிலம்பம் போட்டிக்கு பி.அக்ரஹாரம் அரசு பள்ளி மாணவி தேர்வு - முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு
x
தினத்தந்தி 9 March 2021 10:59 PM IST (Updated: 9 March 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

தேசிய அளவிலான சிலம்பம் போட்டிக்கு பி.அக்ரஹாரம் அரசு பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்தார்.

பென்னாகரம்,

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் 39-வது மாநில அளவிலான ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவு சிலம்பம் போட்டிகள் திருப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் தர்மபுரி மாவட்டம் பி.அக்ரஹாரம் அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவி நிஷா கலந்து கொண்டு மாநில அளவில் 2-ம் இடம் பெற்றார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் இறுதியில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு மாணவி நிஷா தகுதி பெற்றுள்ளார். இந்த மாணவியை தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, பள்ளி தலைமை ஆசிரியர் வையாபுரி, உடற்கல்வி ஆசிரியர் குழந்தைவேல் ஆகியோர் பாராட்டினர்.
1 More update

Next Story