மீன் வியாபாரியை கத்தியால் குத்தியவர் கைது


மீன் வியாபாரியை கத்தியால் குத்தியவர் கைது
x
தினத்தந்தி 9 March 2021 5:53 PM GMT (Updated: 9 March 2021 5:53 PM GMT)

மீன் வியாபாரியை கத்தியால் குத்தியவர் கைது

ராமநாதபுரம்
ராமநாதபுரம் வசந்தநகரை சேர்ந்தவர் பழனிக்குமார்(வயது 34). மீன் வியாபாரியான இவர் மாரியம்மன்கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ள நண்பருடன் பேசி கிண்டல் செய்து கொண்டிருந்தாராம். இதனை கண்ட காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரபுதேவா(26) என்பவர் எங்கள் பகுதியில் வந்து யாரை கிண்டல் செய்கிறாய் என்று கண்டித்து தாக்கினாராம். மேலும், தான் வைத்திருந்த கத்தியால் பழனிக்குமாரை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த பழனிக்குமார் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரினபேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து பிரபுதேவாவை கைது செய்தனர்.

Next Story