ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு


ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு
x
தினத்தந்தி 9 March 2021 6:52 PM GMT (Updated: 2021-03-10T00:25:11+05:30)

ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு.

குளித்தலை,

கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த சிலர், ஏலச்சீட்டு நடத்தி தங்களிடம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று குளித்தலை உதவி கலெக்டர் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனுக்கள் அளித்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, கரூர் மாவட்டம் கடவூர் வட்டத்திற்குட்பட்ட நாயக்கனூரைச் சேர்ந்த ஒருவர் திண்டுக்கல் மாவட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். மேலும், அவர் மாதச்சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் நாங்கள் மாதச்சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தோம். ஆனால், அதற்கான முதிர்வு காலம் முடிந்தும் எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு பணம் தருவதாக கூறி காலம் கடத்தி வருகிறார். அவர், ஏலச்சீட்டு மூலம் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருக்கலாம். இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Next Story