மகளிர் தின விழா

சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
சிவகங்கை,
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி பேசியதாவது:-
பெண்கள் தங்களுடைய சக்தியை, மனவலிமையை வெளிப்படுத்துவதன் மூலம் உயர்பதவியை அடையலாம். அதேவேளையில் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும் வகையில் உயர்ந்த நோக்கத்திற்காக பெற்ற கல்வியையும், மனஉறுதியையும் பயன்படுத்த வேண்டும். நம்மை நாமே காத்துக்கொள்ளவேண்டும். நமக்கு தேவை வேகம், விவேகம், விழிப்புணர்வு.
இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பேச்சு போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு அவர் பரிசு வழங்கினார். இதில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி யு.மு.பாபுலால், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் முதுநிலை தமிழ் ஆசிரியை முனிஸ்வரி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story