குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு


குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு
x
தினத்தந்தி 10 March 2021 12:38 AM IST (Updated: 10 March 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

குளத்தில் மூழ்கி சிறுவன் சாவு

ஆலங்குடி:
ஆலங்குடி அருகில் உள்ள கொத்தக்கோட்டை கிழக்கு பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் நவீன்குமார் (வயது 17). இவர் சம்பவத்தன்று கொத்தக் கோட்டையில் உள்ள குளத்தில் தனியாக குளிக்கச் சென்றுள்ளார். குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார். அப்போது நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி நவீன்குமார் பரிதாபமாக இறந்தார். குளிக்கச் சென்ற நவீனை தேடி குளத்திற்கு சென்றபொழுது, அவரது ஆடைகள் கண்மாய்கரையில் கிடந்துள்ளது. சந்தேகமடைந்த உறவினர்கள் குளத்தில் இறங்கி, நவீன்குமார் உடலை கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர். 
1 More update

Next Story