காளையார்கோவில்,
காளையார்கோவிலில் சொர்ண காளீஸ்வரர் கோவிலில் நாளை(வியாழக்கிழமை) மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.நாளை மாலை 6 மணி முதல் சொர்ண காளீஸ்வரர்- சொர்ணவல்லி அம்பாள், சோமேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்பாள், சுந்தரேஸ்வரர் - மீனாட்சி அம்பாள் ஆகிய 3 சிவன் கோவிலிலும் 4 கால பூஜைகள் நடக்கின்றன. இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சேலம் அருணை உழவார திருக்கூட்டம் அமைப்பின் சார்பில் கோவில் வளாக சுவர்களின் மீது வளர்ந்துள்ள தேவையற்ற செடி, கொடிகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.