போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியைகளுக்கு பரிசு


போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியைகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 9 March 2021 7:33 PM GMT (Updated: 2021-03-10T01:04:12+05:30)

போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஆண்டிமடம்,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட துணைச் செயலாளர் பவுலின்மேரி தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் ஜெயசீலி, துணை தலைவர் உபகாரம்மாள், மாவட்ட அமைப்பாளர் மெட்டில்டாஹெலன்ராணி ஆகியோர் பேசினர். ஆண்டிமடம் வட்டார கல்வி அலுவலர் முனியம்மாள் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இசை நாற்காலி, கவிதை போட்டி, பாடல், கட்டுரை, மகளிருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் தயாரித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
ராமேசுவரத்தில் நடைபெற்ற 100 சிறிய ரக செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை புரிந்த ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த அரசு கல்லூரி மாணவி மோனிஷாவை பாராட்டி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் (பொறுப்பு) ராஜேந்திரன் நூல் வழங்கினார். மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவி சவும்யாவுக்கு அரசு சித்த மருத்துவர் லலிதாகுமாரி பரிசு வழங்கினார். 
இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் எழில், மாவட்ட தலைவர் அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Next Story