இலவச கண் பரிசோதனை முகாம்; 14-ந் தேதி நடக்கிறது


இலவச கண் பரிசோதனை முகாம்; 14-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 9 March 2021 7:34 PM GMT (Updated: 2021-03-10T01:06:02+05:30)

ஜெயங்கொண்டத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ஒரு மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம், வருகிற 14-ந் தேதி காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்குரியவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முகாமிற்கு வரும் கண் சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்கள் முகவரி சான்றிதழ் நகல்களாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ரேஷன் அட்டையை அவசியம் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story