மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று


மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 9 March 2021 7:41 PM GMT (Updated: 2021-03-10T01:13:13+05:30)

பெரம்பலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 2 ஆயிரத்து 285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 261 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலால் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பெரம்பலூர் வட்டாரத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 286 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கோவை தனியார் மருத்துவமனையில் ஒருவரும், பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் 2 பேரும், அரியலூர் அரசு மருத்துவமனையில் ஒருவரும் என 4 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story