நெல்லை அருகே தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது


நெல்லை அருகே  தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது
x
தினத்தந்தி 9 March 2021 7:53 PM GMT (Updated: 2021-03-10T01:23:52+05:30)

நெல்லை அருகே தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள செங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் உய்க்காட்டான் (வயது 52). இவருடைய மகன் பால் சிதம்பரம் (21). இவர் அந்த பகுதியில் ஒர்க்‌ஷாப் வைப்பதற்காக, தன்னுடைய நகையை தந்தையிடம் கொடுத்து ரூ.20 ஆயிரம் ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுள்ளார். 

ஆனால் உய்க்காட்டான் நகையை விற்பனை செய்து விட்டு ஒர்க்‌ஷாப் அமைக்க கடை பார்த்து கொடுக்கவில்லையாம். இதுதொடர்பாக பால்சிதம்பரம் தந்தையிடம் கேட்டார்.

அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பால் சிதம்பரம் அரிவாளால் உய்க்காட்டானை வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த உய்க்காட்டான், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்சிதம்பரத்தை கைது செய்தனர்.

Next Story