சுத்தமல்லி அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; 6 பேர் காயம்


சுத்தமல்லி அருகே  வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; 6 பேர் காயம்
x
தினத்தந்தி 9 March 2021 7:58 PM GMT (Updated: 9 March 2021 7:58 PM GMT)

சுத்தமல்லி அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதியதில் 6 பேர் காயம் அடைந்தனர்.

பேட்டை:

நெல்லை சுத்தமல்லி அருகே உள்ள நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 35). இவர் தனது வேனில் உறவினர்களை அழைத்துக் கொண்டு நெல்லையில் இருந்து நரசிங்கநல்லூருக்கு சென்று கொண்டு இருந்தார்.

சுத்தமல்லி அருகே வேன் சென்ற போது, எதிரே பத்தமடையைச் சேர்ந்த துரைராஜ் (42) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். கண் இமைக்கும் நேரத்தில் வேன்-மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவத்தில் துரைராஜ், வேனில் வந்த குமார், மகாதேவி, சாந்தி, முத்துலட்சுமி, செல்வகுமார் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story