மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்


மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 March 2021 1:45 AM IST (Updated: 11 March 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்; கலெக்டரிடம் கோரிக்கை.

நாமக்கல்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜிடம் கொடுக்கப்பட்டு உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கர்ப்பிணிகள், இருதயம், நீரழிவு, எலும்பு சார்ந்த நோய், சிறுநீரகம், கண்பார்வை குறைபாடு, குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டோர், மகப்பேறு விடுப்பு, கைக்குழந்தை பராமரிப்பு காலத்தில் உள்ள பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும்.
தொடக்கக்கல்வித்துறையில் 85 சதவீதத்துக்கும் அதிகமான பெண் அசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் பணியாற்றும் ஒன்றியங்களிலேயே தேர்தல் பணியில் அமர்த்த வேண்டும். பட்டதாரி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை தலைமையாசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோரின் பதவி, ஊதிய விகிதம், தேர்தல் பணி மூப்பு, தேர்தல் பணி அனுபவம் ஆகியவற்றை பரிசீலித்து வாக்குச்சாவடி அலுவலர் நியமனங்களை முறைப்படுத்த வேண்டும். கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கொல்லிமலையில் தேர்தல் அலுவலர்களாக பணியாற்றிய அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் வருகிற சட்டசபை தேர்தலில் கொல்லிமலையில் தேர்தல் பணியமர்த்துவதை கைவிட வேண்டும். தேர்தல் பணிக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்தை 3 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story