நாமக்கல் பகுதியில் 6 இணைப்புகளில் மின் திருட்டு கண்டுபிடிப்பு
நாமக்கல் பகுதியில் 6 இணைப்புகளில் மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கோவை அமலாக்க கோட்டத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி அமலாக்க அதிகாரிகள் நாமக்கல் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட புதன்சந்தை, நாமக்கல், ஆண்டகளூர் கேட் மற்றும் பெரியமணலி பகுதிகளில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது 6 இணைப்புகளில் மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனால் ரூ.13 லட்சத்து 44 ஆயிரத்து 269 அபராத தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன் வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.83 ஆயிரம் செலுத்தியதால் அவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை கோவை அமலாக்க பிரிவு செயற்பொறியாளருக்கு 94430 49456 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story