ஜலகண்டாபுரம் அருகே, நிலத்தகராறில் இருதரப்பினர் மோதல்; 3 பேர் கைது


ஜலகண்டாபுரம் அருகே, நிலத்தகராறில் இருதரப்பினர் மோதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 March 2021 11:50 AM IST (Updated: 12 March 2021 11:55 AM IST)
t-max-icont-min-icon

ஜலகண்டாபுரம் அருகே, நிலத்தகராறில் இருதரப்பினர் மோதல்; 3 பேர் கைது செய்தனர்.

மேச்சேரி,

ஜலகண்டாபுரம் அருகே அரியாம்பட்டி மாரிவளவு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கும், இவருடைய அண்ணன் குழந்தைவேலுக்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இவர்கள் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆறுமுகத்தின் மனைவி சின்னத்தாயியை குழந்தைவேல், ராமாயி, காமராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கியதுடன், வீட்டுக்குள் புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினர். மேலும் பீரோவில் உள்ள துணிகளை வெளியே எடுத்து வந்து போட்டு தீ  வைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து குழந்தைவேலின் மகன் மணியின் வீட்டுக்குள் புகுந்து எதிர்தரப்பினர் பொருட்களை சேதப்படுத்தியதுடன், வீட்டு நிலப்பத்திரம் மற்றும் துணிகளை வெளியே எடுத்துக்கொண்டு வந்து போட்டு தீ வைத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஜலகண்டாபுரம் போலீசார், குழந்தைவேல் (50), ராமாயி (46), காமராஜ் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சக்திவேலை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story