அன்னூர் அருகே தனியார் பஞ்சு மில்லில் தீ விபத்து
அன்னூர் அருகே உள்ள தனியார் பஞ்சு மில்லில் தீப்பிடித்தது.
அன்னூர்,
அன்னூரில் இருந்து சத்தி செல்லும் சாலையில் மைல்கல் பகுதியில் தனியார் பஞ்சு மில் உள்ளது. இங்கு திடீரென்று பஞ்சு மூட்டைகளில் தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பரவியது.
இது குறித்த தகவல் அறிந்த அன்னூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு பிடித்த தீயை அணைத்தனர். அத்துடன் அங்கு இருந்த பஞ்சு மூட்டைகளை அப்புறப்படுத்தி வேறு பகுதியில் அடுக்கி வைத்தனர்.
இந்த நிலையில் வேறு பகுதியில் அடுக்கி வைத்திருந்த பஞ்சுகளில் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த அன்னூர், மேட்டுப்பாளையம் மற்றும் கோவையில் இருந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இதில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story