கோவிலுக்கு சென்ற தொழிலாளியிடம் பணம் பறித்த 3 பெண்கள் கைது
கோவிலுக்கு சென்ற தொழிலாளியிடம் பணம் பறித்த 3 பெண்கள் கைது செய்தனர்.
சேலம்,
சேலம் கம்மநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன். தொழிலாளி. இவர் அழகாபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். பின்னர் சாமி கும்பிட்டு விட்டு கூட்டத்தில் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 3 பெண்கள் அவரிடம் இருந்து ரூ.1,200-யை பறித்துக்கொண்டனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை பிடித்து அழகாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது கோவையை சேர்ந்த முனியம்மாள் (வயது 30), பாப்பாத்தி (39), கவிதா (36) என்பது ெதரியவந்தது. தொடர்ந்து 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story