வேன் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி


வேன் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 13 March 2021 10:57 AM IST (Updated: 13 March 2021 10:57 AM IST)
t-max-icont-min-icon

சித்தாலப்பாக்கம் சிக்னல் அருகே வந்தபோது பின்னால் வந்த லோடு வேன் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32). கூலி தொழிலாளி. நேற்று இரவு பிரகாஷ், தனது மோட்டார் சைக்கிளில் மேடவாக்கம்-மாம்பாக்கம் மெயின் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

சித்தாலப்பாக்கம் சிக்னல் அருகே வந்தபோது பின்னால் வந்த லோடு வேன் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பிரகாஷ், வேன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு வேன் டிரைவரான சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்த செந்தில்வேல் (40) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story