சென்னையில் 15 தொகுதியில் தி.மு.க. போட்டி 12 தொகுதிகளில் அ.தி.மு.க. களம் காண்கிறது
துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயர்நகர், வேளச்சேரி ஆகிய 13 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட்டது.
சென்னை,
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் ஆர்.கே.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர் (தனி), எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயர்நகர், வேளச்சேரி ஆகிய 13 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட்டது.
பெரம்பூர் தொகுதி கூட்டணியில் இருந்த என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கும், ராயபுரம், மயிலாப்பூர் ஆகிய 2 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் வேளச்சேரி தொகுதி மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 15 தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க.வில் துறைமுகம் தொகுதி பா.ஜ.க.வுக்கும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பா.ம.க.வுக்கும், திரு.வி.க.நகர் தொகுதி த.மா.கா.வுக்கும், எழும்பூர் தொகுதி ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மீதளமுள்ள தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதில் வேளச்சேரி தொகுதியை தவிர்த்து 11 தொகுதிகளில் அ.தி.மு.க.-தி.மு.க. நேரடி போட்டி காணப்படுகிறது.
Related Tags :
Next Story