வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்த செயல்விளக்கம்


வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்த செயல்விளக்கம்
x
தினத்தந்தி 14 March 2021 1:40 AM IST (Updated: 14 March 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பூலாம்பாடி பேரூராட்சியில் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி? என்பது குறித்து மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்தை கொண்டு செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவு செய்து, வாக்களிக்கும் விதத்தை தெரிந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வேப்பந்தட்டை தாசில்தார் பாலசுப்பிரமணியம், வருவாய் ஆய்வாளர் கவுரி, அரசு கல்லூரி முதல்வர் சிவனேசன், துணை முதல்வர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story