திருவெறும்பூர் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் எம்.முருகானந்தத்திற்கு வரவேற்பு
திருச்சி திருவெறும்பூர் தொகுதி வேட்பாளருமான பொறியாளர் எம்.முருகானந்தம் கட்சிப்பணிகளை முடித்து திருவெறும்பூர் திரும்பினார்.
திருச்சி,
மக்கள் நீதிமய்யத்தின் தமிழக வேட்பாளர் பட்டியல் முழுதும் வெளியிடப்பட்ட பின்னர், மாநில பொது செயலாளரும், திருச்சி திருவெறும்பூர் தொகுதி வேட்பாளருமான பொறியாளர் எம்.முருகானந்தம் கட்சிப்பணிகளை முடித்து திருவெறும்பூர் திரும்பினார்.
திருச்சிக்கு திரும்பிய வேட்பாளர் பொறியாளர் முருகானந்தம் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர், தொழிலதிபர் வீரசக்தி ஆகியோரை மய்ய உறுப்பினர்களும், பொறுப்பாளர்களும், பொதுமக்களும் திருச்சி விமான நிலையத்திற்கு திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர். அப்போது வேட்பாளர்கள், முசிறி டாக்டர் கோகுல், மண்ணச்ச நல்லூர் சாம்சன், துறையூர் (தனி) யுவராஜ், விராலிமலை வேட்பாளர் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் சரவணன், புதுக்கோட்டை வேட்பாளர் எஸ்.மூர்த்தி ஆகியோர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.மேலும் வேட்பாளரை வரவேற்க மாவட்ட துணை செயலாளர் ஆனந்தகுமார், பொருளாளர்கள் வக்கீல் சுவாமிநாதன், வக்கீல் கிஷோர் குமார், நற்பணி மன்ற மண்டல செயலாளர் நவீன் பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் கே.ஜே.எஸ். குமார், ரகுராம், ஜானிபாட்சா, சகுபர்சாதிக், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் ஜெபராஜ், தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் ஜான்சன் ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர் எஸ்.பி.எஸ். சதீஷ், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் சூரியூர் சக்தி, துவாகுடி நகர செயலாளர் மலை.ஆனந்தன், தொழில் முனைவோர் அணி மண்டல செயலாளர் அய்யனார் ஆகியோர் வரவேற்றனர்.
அப்போது தொகுதியின் எல்லா பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காணப்படும் என்றும், அரியமங்கலம் குப்பை கிடங்கு நவீனப்படுத்தப்பட்டு சுற்றுப்புற தூய்மை பாதுகாக்கப்படும் என்றும் வேட்பாளர் உறுதியளித்தார்.
Related Tags :
Next Story