சென்னை ஐ.ஐ.டி.யில் கட்டுமான பணியின்போது தொழிலாளி பலியான சம்பவத்தில் 2 ஒப்பந்ததாரர்கள் கைது
சென்னை கிண்டி ஐ.ஐ.டி.யில் மெக்கானிக்கல் துறைக்கு கட்டிடம் கட்டுமான பணி நடந்து வருகிறது.
சென்னை,
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் (வயது 26) என்பவர் குஜராத்தை சேர்ந்த ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் சென்னை கிண்டி ஐ.ஐ.டி.யில் மெக்கானிக்கல் துறைக்கு கட்டிடம் கட்டுமான பணி நடந்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக இந்த கட்டிடம் கட்டும் பணியில் குஜராத் கட்டுமான நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
கடந்த 11-ந் தேதி 3-வது மாடியில் மனோஜ் சாரம் கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் எந்தவித உயிர்காக்கும் உபகரணங்கள் இல்லாமல் பணி செய்ய வைத்த நிறுவனத்தின் ஒப்பந்ததாரர்களான குஜராத்தை சேர்ந்த சஞ்சய் சுல்தார் மற்றும் சென்னை கொளத்தூரை சேர்ந்த சத்யராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story