அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 14 March 2021 8:48 PM GMT (Updated: 14 March 2021 8:48 PM GMT)

மேட்டு மகாதானபுரம் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

லாலாபேட்டை:

அங்காளம்மன் கோவில் 
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே மேட்டு மகாதானபுரத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மலையாள கருப்பு, மாசி பெரியண்ணசாமி, மாசி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் உள்ளன. இக்கோவில் திருவிழா கடந்த 11-ந்தேதி  தொடங்கியது. 
இதையடுத்து அன்று மேட்டு மகாதானபுரம் பிடாரி அம்மன் கோவிலில் இருந்து தாய் வீட்டு சீதனம் அழைத்துக் கொண்டு கோவிலை அடைந்தனர். பின்னர் அங்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 12-ந்தேதி அக்னிச்சட்டி, அலகுகுத்தி பக்தர்கள் சென்றனர். பின்னர்  மாவிளக்கு எடுத்தனர். 
தீமிதி திருவிழா
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து  மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. 
இதில் லாலாபேட்டை, மேட்டுமகாதானபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story