காஞ்சீபுரம் அருகே லாரி மோதி காவலாளி சாவு


காஞ்சீபுரம் அருகே லாரி மோதி காவலாளி சாவு
x
தினத்தந்தி 15 March 2021 4:52 AM IST (Updated: 15 March 2021 4:52 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே லாரி மோதி காவலாளி பரிதாபமாக இறந்தார்.

லாரி மோதியது

காஞ்சீபுரத்தை அடுத்த அங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் (52) இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் வழக்கம் போல வேலைக்கு செல்வதற்காக அங்கம்பாக்கத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அவளூர்-வாலாஜாபாத் மேம்பாலம் பகுதியில் சென்றபோது கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு லாரி இவரது இரு சக்கரவாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

சாவு

இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜன் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

1 More update

Next Story