திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி


திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி
x
தினத்தந்தி 15 March 2021 7:15 AM IST (Updated: 15 March 2021 7:10 AM IST)
t-max-icont-min-icon

மதசார்பற்ற முற்போக்குகூட்டணியில் அங்கம் வகிக்கும் தோழமை கட்சிகளின் திருவெறும்பூர் தொகுதிக் குட்பட்ட நிர்வாகிகளை திருவெறும்பூர் தொகுதி கழக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம் என்று உறுதியளித்த கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார். உடன் வி.சி.க. மாவட்ட செயலாளர் முத்தழகன், திராவிட கழகம் சேகர், ஆரோக்கியசாமி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்  மாணிக்கம், மறுமலர்ச்சி மக்கள் முன்னேற்ற கழகம் பொன்முருகேசன் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story