காஞ்சீபுரம் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது


காஞ்சீபுரம் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது
x
தினத்தந்தி 16 March 2021 8:00 PM IST (Updated: 16 March 2021 8:00 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் அடுத்த நீர்வள்ளூர் கிராமத்தில் சட்டவிரோதமாக அரசு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜமாணிக்கம், சேதுராஜன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 4 பேரிடம் சோதனை செய்ததில், 75 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், ஆரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழனி (36), நீர்வள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (25), மணிகண்டன் (26), பெருமாள் (45) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story