ஆலங்குடியில் 2 பேர் வேட்பு மனு தாக்கல்


ஆலங்குடியில் 2 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 17 March 2021 12:07 AM IST (Updated: 17 March 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் 3-வது நாளில் நேற்று ஆலங்குடியில் மட்டும் 2 பேர் மனு தாக்கல் செய்தனர்.

புதுக்கோட்டை, மார்ச்.17-
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் 3-வது நாளில் நேற்று ஆலங்குடியில் மட்டும் 2 பேர் மனு தாக்கல் செய்தனர்.
2 பேர் மனு தாக்கல்
சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. 13, 14-ந் தேதிகளில் விடுமுறை ஆகும். நேற்று முன்தினம் 2-வது நாளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
 இந்த நிலையில் நேற்று 3-வது நாளில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை (தனி), திருமயம், அறந்தாங்கி, விராலிமலை ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அந்தந்த அலுவலகங்கள் பரபரப்பின்றி காணப்பட்டன. போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் வழக்கமான பாதுகாப்பான பணியை மேற்கொண்டனர். ஆலங்குடியில் மட்டும் நேற்று 2 பேர் மனு தாக்கல் செய்தனர். இதில் ஒருவர் அ.ம.மு.க. மாற்று வேட்பாளர் ராபர்ட் கென்னடி, மற்றொருவர் பி.எஸ்.பி. கட்சியை சேர்ந்த சின்னதுரை ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்தனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 12 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
19-ந் தேதி கடைசி நாள்
வேட்பு மனு தாக்கல் வருகிற 19-ந் தேதி வரை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ந் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற 22-ந் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை இறுதிவேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) அரசியல் கட்சி வேட்பாளர்கள் பலர் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இடங்களில் பாதுகாப்பிற்கு கூடுதலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story