திருக்காட்டுப்பள்ளி அருகே வாகன சோதனையில் ரூ.61 ஆயிரம் சிக்கியது


திருக்காட்டுப்பள்ளி அருகே வாகன சோதனையில் ரூ.61 ஆயிரம் சிக்கியது
x
தினத்தந்தி 17 March 2021 1:35 AM IST (Updated: 17 March 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

திருக்காட்டுப்பள்ளி அருகே வாகன சோதனையில் ரூ.61 ஆயிரம் சிக்கியது.

திருக்காட்டுப்பள்ளி:-

திருக்காட்டுப்பள்ளி அருகே வாகன சோதனையில் ரூ.61 ஆயிரம் சிக்கியது.

வாகன சோதனை

திருவையாறு சட்டசபை தொகுதி நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரி கஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் துணை ராணுவ படையினர் நேற்று மாலை திருக்காட்டுப்பள்ளி கண்டியூர் சாலையில் உள்ள திருவாலம்பொழில் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி வந்த ஒரு வேனை வழிமறித்து சோதனையிட்டனர். அந்த வேனில் தில்லைஸ்தானம் செக்கடிதெருவை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி ரூ.61 ஆயிரத்து 990 இருந்தது.

பணம் பறிமுதல்

இதுகுறித்து அவரிடம் பறக்கும் படையினர் கேட்டபோது மளிகை கடைகளில் பொருட்களை கொடுத்து வசூல் செய்து வந்ததாக தெரிவித்தார். 
இருந்த போதிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது உரிய ஆவணங்களின்றி அதிக தொகையை எடுத்து வந்ததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருவையாறுஉதவி தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

Next Story