அகழியில் குதித்து தொழிலாளி தற்கொலை


அகழியில் குதித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 16 March 2021 9:05 PM GMT (Updated: 16 March 2021 9:05 PM GMT)

வேலூர் கோட்டை அகழியில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

வேலூர் கோட்டை அகழியில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர் கோட்டை அகழியில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்தனர். பின்னர் அகழியில் மிதந்த பிணத்தை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது வேலூர் குடோன் தெருவை சேர்ந்த தொழிலாளி அப்துல்சமத் (வயது 56) என்பது தெரியவந்தது. மேலும் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகவும், நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்று கோட்டை அகழியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story