ஆலங்குளத்தில் மாட்டு வண்டியில் சென்று வேட்புமனு தாக்கல் செய்த பெண் வேட்பாளர்


ஆலங்குளத்தில் மாட்டு வண்டியில் சென்று வேட்புமனு தாக்கல் செய்த பெண் வேட்பாளர்
x
தினத்தந்தி 17 March 2021 3:55 AM IST (Updated: 17 March 2021 3:55 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் மாட்டு வண்டியில் சென்று பெண் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சங்கீதா போட்டியிடுகிறார். அவர் நேற்று ஆலங்குளம் தையல்நாயகி காய்கனி மார்க்கெட்டில் இருந்து தாலுகா அலுவலகத்துக்கு மாட்டு வண்டியில் வந்தார். அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ மனோகரனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். 
நெல்லை சட்டமன்ற தொகுதியில் இந்து தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சங்கரநாராயணன் சைக்கிள் ரிக்‌ஷாவில், வேப்பிலை, மாவிலைகளை கட்டி தொங்கவிட்டும், அதை கையில் ஏந்தியவாறும் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் தேர்தல் நடத்தும் அலுவலரான உதவி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Next Story