தென்காசி மாவட்டத்தில் வாகன சோதனையில் ரூ.7¼ லட்சம் சிக்கியது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.7¼ லட்சம் சிக்கியது.
தென்காசி:
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக- கேரள எல்லையான புளியரை சோதனைச்சாவடியிலும் இரு மாநிலங்களுக்கு இடையே செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் யாராவது பணம் கொண்டு சென்றால் அதை பறக்கும் படையினரும், போலீசாரும் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இங்கு நேற்று கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த நாயகம் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அவர் கேரளாவிற்கு சென்று எலுமிச்சம் ்பழம் விற்று பணத்தை ெகாண்டு வருவதாக கூறினார். ஆனால் அதற்கு உரிய ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் கேரளாவில் இருந்து வந்த ஆலங்குளத்தை சேர்ந்த துரை என்பவரிடம் ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 500-ஐயும், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு சென்று திரும்பிய சுப்புராஜ் என்பவரிடம் இருந்து ரூ.2 லட்சத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சுப்புராஜ் புண்ணாக்கு விற்று பணத்தை கொண்டு வருவதாக தெரிவித்தார். ஆனால் அதற்கு உரிய ஆவணம் அவரிடம் இல்லை என்பதால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் 3 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஆதிநாராயணனிடம் ஒப்படைக்கப்பட்டது. தென்காசி அருகே உள்ள இலத்தூர் விலக்கில் இருந்து கணக்கப்பிள்ளை வலசை செல்லும் சாலையில் நடந்த வாகன சோதனையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த நசீர் என்பவரிடம் ரூ.86 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.7 லட்சத்து 21 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story